தியேட்டரில் ரிலீஸ் ஆகும் விஜய்சேதுபதியின் ‘க/பெ ரணசிங்கம்

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்த ‘க/பெ ரணசிங்கம்’ என்ற திரைப்படம் வரும் அக்டோபர் இரண்டாம் தேதி ஓடிடியில் ரிலீசாக உள்ளது என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த படத்தை ஓடிடியில் ஒரு முறை பார்ப்பதற்காக 199 ரூபாய் கட்டணம் என நிர்ணயிக்கப்பட்டு உள்ளது என்பதும் இதனால் ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதே நேரத்தில் 199 ரூபாய் செலுத்திவிட்டு ஒரு வீட்டில் உள்ள 10 பேர்கள் இந்த படத்தை பார்ப்பார்கள் என்றும் அதனால் தியேட்டர் கட்டணத்தையும் ஓடிடி கட்டணத்தையும் ஒப்பிடக் கூடாது என்றும் ஓடிடி தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் சமீபத்தில் மத்திய அரசு டிரைவ்-இன் தியேட்டர்களை திறக்க அனுமதி அளித்தது என்பது தெரிந்ததே. அந்த வகையில் தற்போது பெங்களூரில் டிரைவ்-இன் தியேட்டர்கள் வரும் 2ம் தேதி திறக்கப்பட இருப்பதாகவும் இதனை அடுத்து ‘க/பெ ரணசிங்கம்’ படம் பெங்களூரில் உள்ள டிரைவ்-இன் தியேட்டர்களிலும் ரிலீஸ் ஆக உள்ளது என்றும் செய்திகள் வெளிவந்துள்ளது.

விஜய் சேதுபதி நடித்த‘க/பெ ரணசிங்கம்’ ஓடிடி மட்டுமின்றி டிரைவ்-இன் திரையரங்குகளிலும் வெளியாக உள்ளது அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் உள்ள டிரைவ்-இன் தியேட்டர்களிலும் இந்த படம் வெளியாகுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.