விஜய்சேதுபதியின் சங்கத்தமிழன் வரும் தீபாவளி அன்று ரிலீஸ் ஆகவில்லை மற்றும் அதற்கு முன்னரே ரிலீஸ் செய்யப்படும் என்று அப்படத்தின் விஜயா புரொடக்ஷன்ஸ் தெரிவித்துள்ளது.

vijay sethupathy quit

படத்தின் டீஸரும், கமலா என்ற பாடலும் வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் விஜய் சேதுபதி இரட்டை வேடத்தில் நடிப்பது தான் சிறப்பு.

வாலு, ஸ்கெட்ச்  ஆகிய படங்களை இயக்கிய விஜய் சந்தர் இப்படத்தை இயக்கியுள்ளார்.  தளபதி விஜயின் பிகில் மற்றும் லோகேஷ் கனகராஜன் இயக்கத்தில் கார்த்திக் நடித்திருக்கும் கைதி திரைப்படம் தீபாவளிக்கு வெளிவர உள்ளது.

ஏற்கனவே தளபதி ரசிகர்கள் விஜய்யுடன் போட்டியா விஜய்சேதுபதி என்று இணையதளத்தில் சண்டையிட்டு வருகின்றனர். தற்போது இந்த ரிலீஸ் தேதியின் மாற்றத்தை பார்த்து  கொண்டாடி வருகின்றனர்.

இதனால் விஜய்சேதுபதியின் சங்கத்தமிழன் படம் அக்டோபர் 4ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்துள்ளது.