மேகமலை

தமிழ்நாட்டின், தேனி மாவட்டம், ஆண்டிபட்டி வட்டம், கடமலை-மயிலாடும்பாறை ஊராட்சி ஒன்றியம், மேகமலை ஊராட்சியில் அமைந்துள்ளது. சின்னமனூர் நகரத்திலிருந்து மலைப்பாதை வழியாகச் சென்றால் மேகமலையை எளிதாக அடையலாம். மேகமலை பெரிய மரங்கள், பசுமையான நிலப்பரப்புடன், மிக அழகான சாய்ந்த நிலப்பரப்பில் உள்ள தேயிலை, காபி பயிர்த் தோட்டங்கள், உயர்ந்த மலைகளின் அழகு, மிக ஆழமான பள்ளம், அழகிய ஏரிப்பகுதி என பல இயற்கை அழகுக் கொட்டிக் கிடக்கும் இடம் இது. மேகமலை நாலைந்து மலைச்சிகரங்கள் நடுவே உள்ள ஒரு பள்ளத்தாக்கு. மேகமலை தமிழ்நாட்டில் உள்ள மலைவாச தலங்களில் சிறந்த அமைப்பு கொண்டது. எரசக்கநாயக்கனூர் சீமைக்கு மேலே உள்ளது மேகமலை ஊராட்சி.