கன்னியாகுமரி – இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டம், அகத்தீஸ்வரம் வட்டத்தில் இருக்கும் ஒர் பேரூராட்சி ஆகும். இப்பேரூராட்சியில் கன்னியாகுமரி தொடருந்து நிலையம் உள்ளது.
இம்மாவட்டமானது இவ்வுரின் பெயராலேயே அழைக்கப்படுகிறது. இங்கு வங்காள விரிகுடா, அரபிக்கடல், இந்தியப் பெருங்கடல் ஆகியவை இணைகின்றன. இது இந்தியாவின் தென்கோடியில் அமைந்துள்ள ஒரு உலகப் புகழ் சுற்றுலாத் தலமாகும். இங்கு விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் 133-அடி திருவள்ளுவர் சிலை ஆகியவை புகழ்பெற்றவை. கன்னியாகுமரியில் தான் மகாத்மா காந்தியடிகளுடைய சாம்பல் (அஸ்தி) கரைக்கப்பட்டது. காந்தியடிகள், காமராஜரின் நினைவு மண்டபம் கன்னியாகுமரியில் உள்ளது.கன்னியாகுமரி மாவட்டத்தின் தலைநகர் நாகர்கோவில் ஆகும்.
Leave A Comment
You must be logged in to post a comment.