சிவகார்த்திகேயன்  என்பவர் விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்தவரும், தமிழ்த் திரைப்பட நடிகரும் ஆவார். இவர் திருச்சியில் உள்ள ஜெஜெ பொறியியல் கல்லூரியில் பயின்றார். மிமிக்ரி திறமை மூலம் விஜய் டிவியில் தொகுப்பாளராக சேர்ந்தவர். இவர் பசங்க திரைப்படத்தின் இயக்குநர் பாண்டிராஜ் இயக்கி, பெப்ரவரி 3, 2012 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படமான மெரினாவில் கதாநாயகனாகத் தனது திரையுலக வாழ்வைத் துவங்கினார்.