சித் ஸ்ரீராம்

இந்தியாவில், தமிழ்நாட்டில் சென்னையில் இவர் பிறந்தார். இவருக்கு ஒரு வயதாக இருந்த பொழுது இவரது பெற்றோர் சான் பிரான்சிஸ்கோ விரிகுடாப் பகுதிக்குச் சென்றனர். ப்ரிமவுண்ட்டில் வளர்ந்த இவரின் இசைத்திறமை இவரது தாயாரால் பேணி வளர்க்கப்பட்டது. இவரது தாயார் லதா ஸ்ரீராம் சான் பிரான்சிஸ்கோ விரிகுடாப் பகுதியில் ஒரு கருநாடக இசை ஆசிரியர் ஆவார். இவர் அதே நேரத்தில் ரிதம் அண்ட் புளூஸ் உடன் இணைந்து பணியாற்றி வந்தார். 2008 ஆம் ஆண்டில் மிசன் சான் ஜோஸ் உயர்நிலைப் பள்ளியில் பட்டப்படிப்பை முடித்த பிறகு, பெர்க்லி இசைக் கல்லூரியில் சேர்ந்து இசைத் தயாரிப்பு மற்றும் இசைப் பொறியியலில் பட்டம் பெற்றார். தனது கல்லூரிக் காலத்திலிருந்தே தொடர்ச்சியாக இந்தியாவிற்கு வந்து டிசம்பர் மாத மார்கழி உற்சவங்களில் கர்நாடக இசைக் கச்சேரிகளில் கலந்து கொண்டு வந்தார்.